உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே மின் ஆலையில் ஏற்பட்ட மின்சார செயலிழப்பு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொலன்னாவை நகர சபை பிரதேசம், மொரகஸ்முல்லை, ராஜகிரிய பிரதான வீதி மற்றும் ராஜகிரிய முதல் நாவலை வரையான அனைத்து கிளை வீதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மின்சார மறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்