உள்நாடுபிராந்தியம்

கொலையில் முடிந்த வாக்குவாதம் – ஒருவர் கைது

ஹங்குரான்கெத்த, ஹேவாஹெட்ட பகுதியில் ஒருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு, பின்னர் அணைக்கட்டு ஒன்றில் தள்ளிவிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் ஹெவாஹெட்ட நகரில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது மற்றொரு நபருடன் கூடிய குழு இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் ஹேவாஹெட்டவைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹங்குரான்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் மனுஷ நாணயக்கார

editor