உலகம்

கொரோனா வைரஸ் – மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

(UTV| சீனா) – சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள்.

மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவும் இந்த காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முழுவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘இந்த நோய் சுவாசக்குழாய் வழியாக பரவுகிறது, மேலும் வைரஸ் மாற்றம் அடைந்து, நோய் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நோயின் மூலத்தையும், பரவலையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோம்’ என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் லி பின் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், வட கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தானின் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை