உலகம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனை செய்யும் கருவிகள் தட்டுப்பாடு

(UTV|கொழும்பு) – அமெரிக்காவில் கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனை செய்வதற்கான கருவிகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் சுமார் ஒரு மில்லியன் சோதனை கருவிகள் தேவைப்படும் நிலையில், அவற்றை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அமெரிக்காவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேவையான சோதனை கருவிகளை அடுத்த வாரம் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 30 பேர் பலி

அமெரிக்காவின் 47 வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்பு

editor