உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

(UTV|சீனா ) – இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் 240 ஆக இருந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நள்ளிரவில் மாத்திரம் 259 ஆக அதிகரித்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸினால் சுமார் 40 நாடுகளில் புதிதாக 80,000 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சீனாவுக்கு வௌியே கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மெசிடோனியா மற்றும் கிரேக்கத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெனாட்டுவில் புதிதாக நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆகப் பதிவாகியதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், பாகிஸ்தானில் தொற்றுக்குள்ளான முதல் இருவரும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பிரேஸிலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே , ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது

எதிர்க்கட்சித் தலைவரிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்