உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது

(UTV | கொழும்பு) –   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் (87, 54, 78, 36, 83, 69, 70 வயது) உயிரிழப்பு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்வு 

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 13 மற்றும் மாளிகாவத்த பகுதிகளை சேர்ந்த 87 மற்றும் 58 வயதுடைய பெண்களும், கொழும்பு 9 மற்றும் மருதானை பகுதிகளை சேர்ந்த 54 மற்றும் 78 வயதுடைய பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பு 15, கொழும்பு 2 மற்றும் கொழும்பு 13 பகுதிகளை சேர்ந்த 36, 83 மற்றும் 69 வயதுடைய ஆண்களும் உயிரிழந்துள்ளதுடன் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 70 வயது கைது ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திண்மக் கழிவு என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தான பிரச்சினை இல்லை [VIDEO]

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது

editor