உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

(UTV |COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 61 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது 165 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்