உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(11) கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐவர், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2622 பேர் குணமடைந்துள்ளதுடன், 247 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

பால் தேநீரின் விலை அதிகரிப்பு!

editor

துறைமுக நகர மனுக்கள் :நாளை காலை வரை ஒத்திவைப்பு