உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2665 ஆக அதிகரித்துள்ளது

நேற்றைய தினம்(14) 19 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு வருகை தந்த மூன்று பேருக்கும் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள மேலும் நால்வருக்கும் கொரோனா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 9 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களோடு தொடர்பிலிருந்தவர்களாவர்.

இதுவரை 1,988 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கந்தக்காட்டில் மாத்திரம் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு இருவர் மற்றும் ரூமிக்கு பிணை [VIDEO]

மார்ச் மதம் ​1ம் திகதி முதல் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு