உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் நேற்று(26) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு பேரும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1,619 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமித் வீரசிங்க நாளைய தினம் வரை விளக்கமறியலில்

SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் எதிர்க்கட்சி ஆசனத்தில்

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கலனசிறி பதவியேற்பு!

editor