உள்நாடு

கொரோனா தொடர்பில் இலங்கையர்கள் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு பரவினால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டே உலக சுகாதார ஸ்தாபனம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் ஆகவே அது குறித்து இலங்கையர்கள் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

உண்மையாகவே இதுவரை உலக சுகாதார ஸ்தாபனம் எந்தவித வர்த்தக தடையையும், சுற்றுலா தடையும் விதிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால நிலை அறிவிப்புக்கு பின்னர் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளை விமான நிலையத்தில் வைத்தே சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் சுகாதார அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல்மாகாண பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!