கேளிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அஜித் 1.25 கோடி நிதியுதவி

(UTVNEWS | COLOMBO) – கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜித்1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த 15 நாட்களாக மிக வேகமாக இந்தியா முழுவதும் பாதித்து வருகிறது. இதனையை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு, அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், யாரும் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் நாட்டில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த அனைவரும் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதனையடுத்து இந்தியாவின் மத்திய மாநில அரசுகளுக்கு பல தரப்பில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  நடிகர் அஜித், 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதில் 50 இலட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 இலட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுத்துள்ளார். மேலும் ரூபாய் 25 இலட்சம் பெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காகவும், ரூபாய் 2.5 இலட்சம் பி.ஆர்.ஓ யூனியன் நலனுக்காகவும் அவர் நிதி உதவி செய்துள்ளார்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங் மீது பொலிசில் முறைப்பாடு

அவெஞ்சர்ஸ் நடிகைக்கு குழந்தை பிறந்தது