சூடான செய்திகள் 1

கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு ஆசிரியர் சங்கம் கோரிக்கை….

(UTV|COLOMBO)-பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளது.

வாழ்க்கை செலவு மற்றும் தொழில்முறை முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு குறித்த கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி அந்த சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதனுடன், கடந்த ஆகஸ்ட மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தப்பணிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

மின்சார மறுசீரமைப்பு திருத்த சட்டமூல வர்த்தமானி வெளியிடு!