சூடான செய்திகள் 1

கைப்பற்றப்பட்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று அழிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் கைப்பற்றப்பட்ட சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியை கொண்ட 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று(01) கொழும்பு சப்புகஸ்கந்தையில் உள்ள விசேட பிரிவில் அழிக்கப்பட உள்ளன.

பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் குறித்த போதை பொருள் அழிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு ஊடகவியலாளர் மத்தியில் இடம்பெற இருப்பதாக போதை பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த முகார கித்தலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நிதி மோசடி வழக்கு : சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எடுக்க தீர்மானம்

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை