வகைப்படுத்தப்படாத

கைத்தொழில் உற்பத்திச் சுட்டென் 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் [IIP] 1.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.

உற்பத்திக் கைத்தொழில்களில் தளபாடம், ஏனைய உலோகமல்லாத தாதுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஆடை அணிகலன்கள் என்பன 2016 ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைக் காட்டுகின்றது. உணவு உற்பத்தியானது ஏப்ரல் மாதத்தில் 0.1சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள், இரசாயனமும் இரசாயனப் பொருள் உற்பத்தியும் மற்றும் புகையிலை உற்பத்தி ஆகியன வீழ்ச்சியைக் காட்டுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Over 600,000 people affected by drought – DMC

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேஷா மே பதவில் இருந்து ராஜினாமா

පාසැලේ ගසකට නැගි සිසුවාට වුණු දේ