குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டினை தயாரித்த குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் குறித்த உதவி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.