உள்நாடு

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரணடைவதற்காக வருகை

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று (13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

Related posts

ஈரான் தூதுரகத்திற்குச் சென்று கையெழுத்திட்ட மஹிந்த, ஹக்கீம்!

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

ஹட்டன் வாடி வீட்டில் தீ