உள்நாடு

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு

(UTV | கொழும்பு) –  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர் டல்லஸ் அழகப்பெரும இன்று(22) தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமிக்க நீதி அமைச்சர் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, லொஹான் ரத்வத்தே கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

மீண்டும் மலையகத்திற்கான புகையிரத சேவை