உள்நாடு

கைதி ஒருவருக்கு போதைப்பொருள், கைப்பேசிகளை வழங்க உதவிய சிறைச்சாலை அதிகாரி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயது சிறைச்சாலை அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கைப்பேசி வழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, பாணந்துறையின் ஹிரணவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் 35,000 ரூபாய் பணத்தைப் பெற்றதாகத் தெரியவந்தது.

இதன் விளைவாக, குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி உடனடியாக வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளா்ர.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 73

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்