வகைப்படுத்தப்படாத

கேப்பாப்புலவு 189 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

(UDHAYAM, COLOMBO) – முல்லலைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 189 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் இக்காணி முல்லைத்தீவு பிரதேச செயலாளரிடம் கையளிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் ரெசான் செனவிரத்ன இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கேப்பாபுலவு காணிதொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த காணியை கையளிக்கும் நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பிற்பகல் 2.00 மணியளவில் இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கேப்பாப்புலவு பிரதேசத்தில் இராணுவக்கட்டுப்பட்டில் எஞ்சியுள்ள காணிகள் முழுமையாக எப்பொழுது விடுவிக்கப்படும் என்று கேட்டபொழுது ,

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு துரித கதியில் காணிகளை விடுவிப்பதற்கு இவ்வருட இறுதிக்குள் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Disney’s Freeform calls out critics opposing Halle Bailey’s casting as Ariel

எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…