உலகம்

கென்யாவில் வைத்திய விமானம் விபத்து – 6 பேர் பலி

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் (பைலட், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட) மற்றும் தரையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் காயமடைந்தனர்.

விமானம் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்ததாக கென்யா சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

பங்களாதேஷில் பாடசாலையில் மோதிய விமானம்!

editor

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்ய முயன்ற அமைச்சர் கைது!

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!