சூடான செய்திகள் 1

கெசெல்வத்தை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) கெசெல்வத்த – சாங்சி ஆரச்சிவத்த பிரதேசத்தில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய சந்தேக நபர் கெசெல்வத்த பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன் அவர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

திருகோணமலையில் மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தம்

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்