உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது – மதவாச்சியில் சோக சம்பவம்

மதவாச்சி, இசின்பஸ்ஸகம பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் வயதான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட துயரமான சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (27) காலை மதவாச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, இந்தக் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தக் கொலையை அவருடன் வீட்டில் வசித்து வந்த அவரது மகனே செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இரவு கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தனது தாயின் தலையில் அடித்து இந்தக் கொலையச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்தவரின் மகன் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சதோசவுக்கு மதுபான உரிமம்

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை – சிலர் கைது, பல மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்!

editor

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.