உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மாத்தளையில் யட்டவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டிபொல கல்தோர ஹேன வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யட்டவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவருக்கும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 60 வயதுடைய நெருங்கிய உறவினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முன்னாள் எம்.பியின் டிபெண்டர் விபத்தில் சிக்கியது

editor

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor