கேளிக்கை

கூட்டணியாகும் நயன் – சமந்தா

(UTV | சென்னை) –   தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் இணைந்து நடிப்பது அபூர்வமான ஒன்று. இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் இருவரையும் நடிக்க வைக்கும் இயக்குனர் சிக்கலில் சிக்கிக் கொள்வார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு முன்னணி நடிகைகள் ஒரே படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இப்படம் ஏப்ரல் 28ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஆனால், படத்திற்கான பிரமோஷன்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்போதே ஆரம்பித்துவிட்டார். நேற்று 22.02.2022 ஒரு சிறப்பான நாள் என்பதால் ‘Tuesday’ என்பதை ‘Twosday’ என மாற்றி நயன், சமந்தா இருக்கும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். நேற்றிரவு 20.02 மணிக்கு நடிகை சமந்தா, அந்த போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்து “22.02.2022ம் தேதியின் 20.02 மணி சிறப்பானது…எங்களுடைய ஸ்பெஷல் நட்பிற்காக, அவர் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை, இருந்தாலும் அவர் உங்களுக்கு அன்பைத் தருகிறார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்தப் பதிவை நடிகைகள் ராஷி கண்ணா, ருஹானி ஷர்மா உள்ளிட்டவர்களும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களும் லைக் செய்துள்ளார்கள். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இடம் பெற்றுள்ள ‘டைட்டானிக்’ காட்சியைப் படமாக்கிய வீடியோ ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

Related posts

(VIDEO)-ரசிகர்களை கவர்ந்த 2.O மேக்கிங் வீடியோ…

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

ஏ.ஆர்.ரகுமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்