10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் காலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்கேனிங் இயந்திரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.