சூடான செய்திகள் 1

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது

(UTV|COLOMBO)-திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் போதைப் பொருள் போன்றன கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (21) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், கண்டி நகருக்கு பெருமளவிலான போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகந்த, கதிர்காமம், மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்