இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் இந்தியாவின் பெங்களூரில் மத்திய குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலிப் ஹர்ஷன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மூன்று சந்தேக நபர்களும் இந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும், கடந்த ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.