உலகம்உள்நாடு

குர்-ஆனை பாவிப்பது தொடர்பில் அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

(UTV | கொழும்பு) –

ஆா்ப்பாட்டங்களின்போது முஸ்லிம்களின் புனித நூலான திருக் குரானை அவமதிப்பதை தங்கள் நாட்டில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சா் லாா்ஸ் ரஸ்முஸென் கூறியுள்ளாா்.

டென்மாா்க்கும், அண்டை நாடான ஸ்வீடனிலும் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த அங்கு நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது திருக் குரான் அவமதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகினறன.

இது இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. திருக் குரான் அவமதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாடுகளில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், பொது இடங்களில் திருக் குரானை அவமதிக்கும் செயலை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதாவைக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக டென்மாா்க் அமைச்சா் ரஸ்முஸன் தற்போது கூறியுள்ளாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

editor

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் – CEB

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று