உள்நாடு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் இடைமறிக்கப்பட்டு, கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்­யப்­பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக ஏ.எம்.எம்.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்­யப்­பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று (25) மீள ஙிசாரணைக்கு வந்தது.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களைத் தோண்டி எடுப்பதற்கான கட்டளை நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் பைலா பிணையில் விடுவிப்பு

editor

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

editor