வகைப்படுத்தப்படாத

குருகுலராஜா ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வடக்கு முதல்வர்..

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்திற்கு அமைய மாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும் பதவியில் இருந்த விலகுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் சபையில் கோரியிருந்தார்.

இதற்கமைய பொ.ஐங்கரநேசன் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே வழங்கிய நிலையில், தற்போது வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Kimono is ‘Japanese thing’: Japanese official to Kim on her shape wear line

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்