விளையாட்டு

குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

(UTV|INDIA) – இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானிடம் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை அவர் பயன்படுத்தியது தெரிய வந்தது.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான அவருக்கு ஓராண்டு தடைவிதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Related posts

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

பதவி விலகத் தயார் – லசித்

தோல்விக்கான காரணம் வெளியானது…