உள்நாடுசூடான செய்திகள் 1

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

(UTV | கொழும்பு) –     மட்டக்குளிய பிரதேசத்தில் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரில் வந்த இருவரே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நபர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இலஞ்சம் மற்றும் ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்