சூடான செய்திகள் 1

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேரதும் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆனமாலு ரங்கா’ என்பவர் உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(19) கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கம்பஹா பிரதேச சபை உறுப்பினரான தொன் ஷாமால் சிந்தக, போதைப்பொருள் கடத்தல்காரரான ‘குடு ரொஷான்’ என அழைக்கப்படும் பிரசாத் துவான், குடு ரொஷானின் சகோதரரான ரந்தெவ், துஷார மதுரங்க பெரேரா, தினேஷ் ரங்க, சுரனிமல ரொஷான் டயஸ் மற்றும் மொஹம்மட் ஹாரிஸ் மொஹம்மட் ஹூசைன் ஆகிய 7 பேரும் கடந்த 05ம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு