வகைப்படுத்தப்படாத

குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் நாவலபிட்டியில் சம்பவம்

(UDHAYAM, COLOMBO) – குடியிருப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமுற்ற மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகில் தோட்டத்திலே 26.05.2017 காலை 10 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது

கடும் மழை பெய்து வந்த நிலையில் குடியிருப்பிற்கருகில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்து வீட்டின் கூரை முற்றாக சேதமடைந்து இரண்டு வீடுகள் பாதிப்படைந்தது குறித்த குடியிருப்பின் ஒன்றினுள்ளிருந்த வயோதிபப்பெண் உட்பட இரண்டு சிறுவர்களும் காயமுற்றுள்ளனர் காயமுற்ற மூவரையும் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன் குடியிருப்பிலிருந்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தற்காளிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி

Navy Commander given service extension

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு