அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் அதாவுல்லாஹ்? – மறுக்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி – உண்மையில் நடந்தது என்ன?

திகாமடுல்ல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ. எல். எம். அதாவுல்லாஹ் மற்றும் முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே.

இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் பொதுவான விடயங்களுமே பேசப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்து தொடர்பிலுமே பேசப்பட்டது.

ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்வைக் களம் இறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவித்தமை தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் நிசாம் காரியப்பர் கூறியுள்ளார்.

Related posts

13,392 மாணவர்கள் 9 பாடங்களில் A சித்தி!

editor

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்