உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்ககேற்புடன் சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண குழந்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தின கொண்டாட்டம் மற்றும் வழிகாட்டல் பயிற்சி நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறுவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.

விசேட அதிதிகளாக குழந்தை பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பெற்றோர்களை இழந்து வாழும் சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

குழந்தைகளின் கல்வி, நல்வாழ்வு மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டல் ஆலோசனைகள் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒன்பது சர்வதேச லயன்ஸ் கழகங்களின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

TIKTOK படுகொலை : அறுவர் கைது

மறைந்த ரொனி டி மெல் உக் – ஜனாதிபதி இறுதி அஞ்சலி

சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்