உள்நாடு

கிளீன் ஸ்ரீலங்கா – பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பஸ்ஸின் உரிமம் இடைநிறுத்தம்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகன பரிசோதனையின் போது மொரட்டுவை பிரதேசத்தில் பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்ற பேரூந்தின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அவர், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பேருந்து ஊழியர்களுக்கும் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!

இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? – விமல் வீரவன்ச கேள்வி

editor

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor