உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் – இருவர் படுகாயம்

கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு வந்த குடும்பம் பயணித்த வாகனம் விபத்து

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!