உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிளிநொச்சி நீதிமன்றத்தின் அனுமதியுடன் குண்டை பாதுகாப்பாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

-சப்தன்

Related posts

சுஜீவ சேனசிங்கவுக்கு அவதாறு – காணொளிகளுக்கு தொடர்ந்து தடை

editor

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி

editor

GST சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது