சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் பீதியில்

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கத்திமுனையில் கொள்ளையர்கள் அட்டகாசம். 27.03.2018 இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளார்கள்.

அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை  அழைத்து அவரை  கத்திமுனையில் வைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழும்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிசெல்ல முயன்றபோது அயலவர்கள் விரட்டிசென்று உந்துருலியை பிடித்தபோது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களான வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் உந்துருலியையும் விட்டு தப்பிசென்றுள்ளார்கள்.
இது தொடர்பாக பண்னங்கண்டி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்த போது பல மணிநேரம் கழித்தே! அவ் பகுதிக்கு பொலிஸார் வருகைதந்தமையால் கிராமமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடையப்பொருட்களை கொண்டு சென்றுள்ளார்கள்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எஸ்.என்.நிபோஜன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய இளைஞர் விருது விழா…

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து