வகைப்படுத்தப்படாத

கிரீஸில் போராடி அணைக்கப்பட்டது காட்டுத்தீ

(UTV|GREECE)-கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது. சுற்றுலாப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், கார்கள் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர்.

தீ விபத்து சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது, எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் அரசு போராடி தீயை அணைத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாக காணப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

செய்தி சேகரிக்கசென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – [IMAGES]

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை விஜயம்

Sri Lanka to re-launch ‘free Visa on arrival’ service