வகைப்படுத்தப்படாத

கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியக்குழு அனைத்து கிராமப்புற வைத்தியசாலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதகாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் அமல் அரசடி சில்வா தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக அனைத்து வைத்திய சாலைகளிலும் வெளிநோயாளர்பிரிவில் இரத்த பரிசோதனை செய்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் குறுகிய நேரத்திற்குள் இது தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் 42 சதவீதமான டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தமது இருப்பிட சுற்றாடல் பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகாமல் வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related posts

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

Sri Lanka, West Indies fined for slow over rate

களுத்துறையில் மண் சரிவு