உள்நாடு

கிராண்ட்பாஸ் பொலிஸாரால் விசேட சோதனை – ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு – கிராண்ட்பாஸ், ஜோசப் வீதி பகுதியில் நேற்று புதன்கிழமை (24) இரவு ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கொழும்பு 14ஐ சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

சுகாதார விதிமுறைகளை மீறிய 47 பேர் கைது