வகைப்படுத்தப்படாத

கிம் ஜொங் உன் உடனான பேச்சுவார்த்தை தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பு

(UTV|AMERICA)-வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் உடனான பேச்சுவார்த்தை வினைத்திறன் அல்லாதது என தோன்றினால், அந்த பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதமரும், டொனால்ட் ட்ரம்ப்பும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

வடகொரியா தமது அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, ஜப்பானும் அமெரிக்காவும் அதிகபட்ச அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய பிரதமர், டொனால்ட் ட்ரம்பின் மார் – அ- லாகோ விடுதியில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

அதேநேரம், வடகொரியாவின் தலைவருடன், அமெரிக்க சீ.ஐ.ஏயின் பணிப்பாளர் மைக் பொம்பெயோ இரகசிய சந்திப்பை நடத்தி இருந்தமையையும் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

MP Ashu calls for inquiry into Kalagedihena incident

Special form directed at Sri Lanka arrivals called ‘racist’ – [IMAGES]

තිරිගු පිටි කිලෝග්‍රෑමයක මිල රුපියල් 8 කින් ඉහළට