வகைப்படுத்தப்படாத

கினிகத்தேன பேரகொள்ள பகுதியில் வர்த்க நிலையத்துடனான குடியிருப்பு நிலம் தாழிறக்கம்

(UDHAYAM, COLOMBO) – கினிததேன கொழும்பு வீதியின் பேரகொள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வர்த்தக நிலையத்துடனான குடியிருப்பொன்றில் ஏற்பட்ட நிலம் தாழிறக்கத்தினால் அப்பகுதியை அன்மித்த குடியிருப்பு இரண்டின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றியுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பீ சுமனசேகர தெரிவித்தார்

06.06.2017 மாலை 5 மணிமுதல் குறித்த குடியிருப்பு பகுதியில் வெடீப்புகள் ஏற்பட்டு நிலம் தாழிறங்கியது

இந் நிலையில் சம்பவயிடத்திற்கு சென்ற கினிகத்தேன பொலிஸார் போக்குவத்தை  ஒரு வழி வழிபாதையாககியதுடன் அயலவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர்

இந் நிலையில் தொடர்ந்து நிலம் தாழிறங்குவதையடுத்து  07.06.2017 சம்பவயிடத்திற்கு சென்ற அம்பகமுவ பிரதே ச செயலாளர் பாதிப்புக்குள்ளாகிய குறித்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள இரண்டு குடியிருப்புகளின் குடியிருப்பாளர்களை பாதுகாப்பு நிமித்தம் வெளியேருமாறு உத்தரவிட்டதுடன் தேசிய கட்டட அராய்ச்சி நிறுவனத்திற்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Fair weather to prevail in most of Sri Lanka

இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு