உள்நாடுபிராந்தியம்

கித்துல்கலயில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39வது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பலத்த காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கித்துல்கல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தெலிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிதுல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஏழாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

கொழும்பின் வீதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!