வகைப்படுத்தப்படாத

கிண்ணியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO)  – கிண்ணியா மற்றும் திருகோணமலையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவானவர்கள் தங்கிச் சிகிச்சைப் பெறுவதால், குறித்த வைத்தியசாலைகளில் தற்காலிக சிகிச்சைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கிண்ணியா பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.

அங்கு 3 வாரங்களில் 13 பேர் வரையில் டெங்கினால் மரணித்துள்ளனர்.

டெங்கு அச்சத்தில் 66 பாடசாலைகள் வரையில் அங்கு மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிண்ணியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை அமுலாக்கி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகளை சுத்திகரித்து டெங்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திருகோணமலை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க 5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

அத்துடன் டெங்கு நோய் அதிகளவில் பரவியுள்ள கிண்ணியா பிரதேசத்திற்கு 23 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Don Cheadle joins “Space Jam 2” cast

நகர மண்டபத்தின் அருகில் கடுமையான வாகன நெரிசல்

காற்றுடன் கூடிய மழை