உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிண்ணியா, தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர்.

இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க திருமணமானவரின் சடலமாக இருக்கக்கூடும் என கிண்ணியா பொலிஸார் ஆரம்ப விசாரணையின் போது தெரிவித்தனர்.

கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் சடலம் மீட்கப்பட்டது.

சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரமும் அணிந்திருந்தார்.

அருகில் ஜெய்ப்பூர் கால் ஒன்றை கழட்டி வைத்ததவாரே இருந்துள்ளார். அவர் ஊன்றிச் செல்லும் கை தாவல் ஒன்றும் சடலம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் காணப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று இரவு இறந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலையில் சடலத்தை கண்ட கிண்ணியா பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார் அங்கு விஜயம் செய்து சடலத்தை மீட்டுள்ளனர்

Related posts

2026 முதல் பாடசாலை கல்வி தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

editor

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor

பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு!