வகைப்படுத்தப்படாத

கிண்ணியா பிரதேசத்தில் அடையாளங் காணப்படாத எந்த நோயும் இல்லை – சுகாதார அமைச்சு

(UDHAYAM, COLOMBO) – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயைத்தவிர அந்த பிரதேசத்தில்  அடையாளம் காணப்படாத வேறு எந்த நோயும் அங்கு இல்லை என்று சுகாதார அமைச்சுஅறிவித்துள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் அடையாளங்காணப்படாத நோய் பரவிவருவதாக வெளியான செய்தி குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கிண்ணியா உள்ளிட்ட பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத வைரஸ் ஒன்று பரவில்லை என்று ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஒன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நுளம்புகள்  பெருகக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்தல், நோயாளர்களுக்கு துரிதமாக சிகிச்சை வசதிகளை செய்து கொடுப்பதற்கான விடயங்கள் தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

UTV MEDIA WORKSHOP REGISTRATION – 2024

4 மணியில் இருந்து 7 மணிவரை விசேட விவாதம்

“Army unaware of prior intelligence on Easter attacks” – Army Commander